Sunday, March 17, 2013

திருமந்திரம் 3


இறைவன் விளங்கும் திறன்.
                                   
3.                          ஒக்க நின்றானை, உலப்புஇலி தேவர்கள்
                             நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் 
                             பக்கம்நின்றார்அறி யாத பரமனைப் 
                             புக்கு நின்று உன்னி யான் போற்றிசெய் வேனே.

திருமந்திரம் 2

கூற்றுதைத்தான்!


2.                  போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை 
                     நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை 
                     மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம் 
                     கூற்றுஉதைத் தானை யான் கூறுகின் றேனே.

Monday, March 11, 2013

திருமந்திரம் 1


1. கடவுள் வாழ்த்து.

1.                    ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்; 
                       நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து 
                       வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்
                       சென்றனன்; தான் இருந்தான்; உணர்ந்து எட்டே.

Sunday, March 10, 2013

மனிதனும் தெய்வமாகலாம்!

     இந்து மதத்தில் இருக்கின்ற மனிதனை நெறிப்படுத்துகிற மன அமைதிக்கு உண்டான பல்வேறு விதமான யோகம், தியானம் போன்ற விசயங்களை நம்முடைய முன்னோர்களாகிய பெரியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியபடியே அப்படியே தருகிறேன்.

முதலில் திருமூலரிலிருந்து ஆரம்பிப்போம்.

திருச்சிற்றம்பலம்.


விநாயகர் காப்பு.

                          ஐந்து கரத்தனை யானை முகத்தனை
                          இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
                          நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
                          புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


     விநாயக பெருமான் ஐந்து கைகளை உடையவன்; யானையின் முகத்தை உடையவன்; இளம்பிறை சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவன்; சிவபெருமானின் மகன்; ஞானசிகரமாய் விளங்குபவன்; இத்தகைய அப்பெருமானை மனத்துள் வைத்து அப்பெருமானின் திருவடிகளை வணங்குகின்றேன்.